உலக ரசிகர்களில் தமிழ்நாட்டு ரசிகர்கள் போல் வரவே வராது. மிக சரியாக ரசிப்பார்கள். புருஸ்லீயின் ‘என்டர் தி டிராகன்’ படம் சென்னையில் ஒரு ஆண்டு ஓடியது. உலக அளவில் பெரிய வசூலை இங்கே அள்ளியது. Chinni Jayanth, ‘VOWELS – An Atlas of Love’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழ் சினிமாவின் வரவேற்பு மற்றும் தனது பழைய நினைவுகளை பகிர்ந்தார். Rajinikanth நடித்த கன்னட படத்தின் ரீமேக்கில் நடித்த அனுபவத்தையும் நினைவுகூர்ந்தார். தமிழ் சினிமா புதியவர்களை கைவிடாது என நம்பிக்கை தெரிவித்தார்.
VOWELS
VOWELS – An Atlas of Love திரைப்படத்தை திலிப் குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகிய ஐந்து பேர் இணைந்து இயக்கியுள்ளனர்.
இதில் Yugi Sethu, Chinni Jayanth, Samyuktha Viswanathan, Raj Ayyappa, Deepak Paramesh உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் மார்ச் 13ஆம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
Chinni Jayanth
இந்த நிகழ்வில் பேசிய Chinni Jayanth,
“இந்தப் படக்குழுவினர் மிகவும் தைரியமானவர்கள். கர்நாடகாவில் இருந்து தமிழ் சினிமாவை நம்பி வந்திருக்கிறீர்கள். நிச்சயம் தமிழ் சினிமா உங்களை கைவிடாது. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம். தமிழ்நாட்டை நம்பி வந்தால் வெற்றி உறுதி.
நான் நடித்த முதல் படமே கன்னட பட ரீமேக். Puttanna Kanagal இயக்கிய ‘கதா சங்கமம்’ என்ற கன்னட படத்தில் ‘Munithaayi’ என்ற பகுதியில் Rajinikanth வில்லனாக நடித்தார். அதில் உமேஷ் நடித்த பாத்திரத்தை தமிழில் ‘கை கொடுக்கும் கை’ படத்தில் நான் செய்தேன். அந்தப் படத்தின் முதல் காட்சியை இதே கமலா தியேட்டரில் பார்த்தேன். அந்த நினைவுகள் இப்போது மீண்டும் வருகிறது” என்றார்.
VOWELS – An Atlas of Love
மேலும் பேசிய அவர்,
“இந்தப் படத்தில் ஐந்து கதைகள் உள்ளது. அதில் ஒரு கதையில் நான் நடித்துள்ளேன். இந்தப் படத்தை ஐந்து பாகங்களாக எடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். பஞ்ச பூதம் போல ஒவ்வொரு கதையையும் தனித்தனியாக விரிவாக எடுத்தால் இந்த முயற்சி முழுமையாக நிறைவு பெறும்.
உலக ரசிகர்களில் தமிழ்நாட்டு ரசிகர்கள் போல் வரவே வராது. மிகவும் சரியாக ரசிப்பார்கள். Bruce Lee நடித்த ‘Enter the Dragon’ படம் சென்னையில் ஒரு ஆண்டு ஓடியது. உலகளவில் பெரிய வசூலை இங்கே பெற்றது. எனவே நல்ல படங்களுக்கு தமிழக ரசிகர்கள் எப்போதும் ஆதரவு தருவார்கள்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில்,
“1980களில் சினிமாவில் வாய்ப்பு பெறுவது மிகவும் கஷ்டம். ஒரு வாய்ப்பு கிடைத்தால் தொடர்ந்து நடிக்கலாம். நான் 42 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கிறேன். இப்போது வாய்ப்பு கிடைப்பது எளிது. ஆனால் தொடர்ந்து நிலைத்து நிற்க ஒழுக்கமும் கடுமையான உழைப்பும் அவசியம்” எனத் தெரிவித்தார்.

