5 நாட்களுக்கும் மேலாக மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரமடைந்து வருகிறது. Israel மற்றும் United States படைகளுடன் Iran மோதல் தொடரும் நிலையில், ஈரான் தற்போது பிராந்தியத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
காமேனி மரணத்திற்குப் பிறகு தீவிரமடைந்த போர்
போரின் முதல் நாளிலேயே ஈரானின் உச்சத் தலைவர் Ali Khamenei கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.
அண்டை நாடுகள் மீது தாக்குதல்
ஈரான் ராணுவம் Saudi Arabia, Oman, Qatar, Kuwait, Bahrain, Iraq மற்றும் Cyprus உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதல்களை அந்த நாடுகள் கடுமையாக கண்டித்து, ஈரானுக்கு பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளன.
அஜர்பைஜான் மீது ட்ரோன் தாக்குதல்
இந்த மோதல் மேலும் விரிவடைந்த நிலையில், Azerbaijan நாட்டின் நக்ஷிவன் (Nakhchivan) சர்வதேச விமான நிலையம் மீது ஈரானின் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு அஜர்பைஜான் அரசு கடும் கண்டனம் தெரிவித்து, தேவையான பதிலடி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.
‘பெரிஃபெரி அலையன்ஸ்’ திட்டம்
இந்த நிலைமைக்கு பின்னால் இஸ்ரேலின் நீண்டகால ராஜதந்திரத் திட்டம் செயல்பட்டுள்ளதாக சர்வதேச ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஈரானை தனிமைப்படுத்தும் நோக்கில் இஸ்ரேல் பல அரபு நாடுகளுடன் ஆபிரகாம் உடன்படிக்கை (Abraham Accords) மூலம் உறவுகளை வலுப்படுத்தியது.
மேலும் “Alliance of the Periphery” எனப்படும் தந்திரத்தின் மூலம் ஈரானைச் சுற்றியுள்ள நாடுகளுடன் உறவை வளர்த்தது.
சீனாவின் செல்வாக்கு குறைக்க முயற்சி
சமீப காலமாக China உதவியுடன் Saudi Arabia மற்றும் United Arab Emirates போன்ற நாடுகளுடன் ஈரான் உறவை மீண்டும் மேம்படுத்த முயன்றதாக தகவல்கள் வெளியாகின.
அது வெற்றியடைந்தால் அந்த பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து, அமெரிக்காவின் செல்வாக்கு குறையும் என்ற அச்சமும் எழுந்தது.
தனிமைப்படுத்தப்பட்ட ஈரான்
இந்த சூழலில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், அணுஆயுத உற்பத்தி மற்றும் உள்நாட்டு நிலைமைகளை காரணம் காட்டி ஈரான் மீது தாக்குதல் தொடங்கியதாக கூறப்படுகிறது.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை தாக்கியதால், அந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
இதன் விளைவாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல நாடுகள் மீண்டும் அமெரிக்காவின் பாதுகாப்பை நோக்கி நகரும் சூழல் உருவாகியுள்ளது.
இதனால், பிராந்திய அரசியல் கணக்கில் ஈரான் தற்போது அண்டை நாடுகளால் சூழப்பட்ட தனிமையான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

