உலகளவில் சுமார் 120 கோடி மக்கள் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுகின்றனர் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வயது பேதமின்றி, 6 வயது குழந்தைகள் முதல் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களையும் இது பாதிக்கக்கூடிய ஒரு நரம்பியல் குறைபாடாகக் கருதப்படுகிறது.
ஒற்றைத் தலைவலி என்றால் என்ன?
ஒற்றைத் தலைவலி (Migraine) என்பது சாதாரண தலைவலியல்ல. இது தலையின் ஒரு பக்கத்தில் துடிப்பான, கடுமையான வலியுடன் காணப்படும். சிலருக்கு இரு பக்கங்களிலும் ஏற்படலாம்.
இது இரண்டு முக்கிய வகைகளாக பிரிக்கப்படுகிறது:
-
எபிசோடிக் மைக்ரேன் – அவ்வப்போது வரும் தலைவலி
-
குரோனிக் மைக்ரேன் – மாதத்தில் 15 நாட்களுக்கு மேல் நீடிக்கும் நிலை
பொதுவான அறிகுறிகள்
-
அடிக்கடி கொட்டாவி வருதல்
-
வாந்தி அல்லது வாந்தி உணர்வு
-
ஒளி மற்றும் சத்தத்துக்கு அதிக உணர்வு
-
தலையின் ஒரு பகுதியில் துடிப்பு வலி
-
கண் சுற்று வலி அல்லது பார்வை மங்கல்
சிலருக்கு தலைவலி ஆரம்பிக்கும் முன்பே எச்சரிக்கை அறிகுறிகள் தோன்றலாம்.
காரணமாக இருக்கக்கூடியவை
-
மன அழுத்தம்
-
தூக்கமின்மை அல்லது அதிக தூக்கம்
-
மாதவிடாய் கால ஹார்மோன் மாற்றங்கள்
-
வானிலை மாற்றம்
-
உணவு முறையில் மாற்றங்கள்
-
நீண்ட நேரம் மொபைல்/கணினி பயன்படுத்துதல்
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
மாதத்தில் 4 நாட்களுக்கு மேல் தலைவலி தொடர்ந்து இருந்தால் அல்லது வலி தீவிரமாக இருந்தால், சுயமாக மாத்திரை எடுத்துக் கொண்டு தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
மருத்துவர்கள் கூறுவதாவது, சரியான ஆலோசனை மற்றும் சிகிச்சை மூலம் வலியின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும். ஆனால், தற்காலிக நிவாரணத்திற்காக அடிக்கடி வலி மாத்திரைகள் எடுத்தால் அது மேலும் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.
மேலாண்மை வழிகள்
-
ஒழுங்கையான தூக்கம்
-
மனஅழுத்தக் கட்டுப்பாடு (யோகா, தியானம்)
-
சரியான உணவுமுறை
-
மருத்துவர் பரிந்துரைக்கும் தடுப்பு மருந்துகள்
-
தலைவலி டையரி வைத்துப் பதிவுசெய்தல்
ஒற்றைத் தலைவலி முழுமையாக குணமாகும் நோயாக இல்லாவிட்டாலும், தகுந்த மருத்துவ மேலாண்மை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் அதன் தாக்கத்தை குறைக்க முடியும். தொடர்ந்து வலி இருந்தால் தாமதிக்காமல் நிபுணரை அணுகுவது பாதுகாப்பானது.

