ஜப்பானின் Ichikawa City Zooவில் வசிக்கும் ‘Punch’ என அழைக்கப்படும் குட்டி ஜப்பானிய macaque குரங்கு, சமீப நாட்களில் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம் – பிறந்த சில மாதங்களிலேயே தாயால் புறக்கணிக்கப்பட்டது.
Orangutan பொம்மை… தனிமைக்கு ஒரு தோழன்
தனியாக இருந்த Punch-க்கு, பூங்கா நிர்வாகம் orangutan வடிவிலான மென்மையான பொம்மையை வழங்கியது. அந்த பொம்மையைத் தூக்கிச் செல்லும், அணைத்துக் கொள்வது போன்ற காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவின.
Punch-ஐ பராமரித்து வரும் காப்பாளர் Kosuke Shikano,
-
“இந்த பொம்மை Punch-க்கு மன அமைதியும் பாதுகாப்பு உணர்வும் தருகிறது”
-
“மற்ற குரங்குகளுடன் பழகும் வரை இது ஒரு இடைக்கால ஆதரவாக இருக்கும்”
என்று விளக்கினார்.
தாய் ஏன் நிராகரித்தது?
பூங்கா அதிகாரிகள் கூறுவதற்கின்படி, Punch-ன் தாய் முதல்முறை குட்டி பெற்றிருந்தது. கடுமையான கோடை வெப்பநிலையும், தாயின் மன அழுத்தமும், குட்டியை ஏற்றுக்கொள்ளாத சூழ்நிலையை உருவாக்கியிருக்கலாம் என அவர்கள் கருதுகின்றனர்.
இப்போது Punch மெதுவாக மற்ற குரங்குகளுடன் கலக்கத் தொடங்கியுள்ளது. காலப்போக்கில், அந்த பொம்மையின் அவசியம் குறைந்து, இயல்பான சமூக வாழ்க்கைக்கு திரும்பும் என பராமரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
இணையத்தில் பரவும் அன்பு
Punch-ன் காட்சிகள் வைரலானதுடன், பலரும் அதை மனித வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பேசுகின்றனர். தனிமை, பாசம், அரவணைப்பு – எந்த உயிரினத்திற்கும் அவசியமானவை என்பதையே இந்த சம்பவம் நினைவூட்டுகிறது.
குரங்காக இருந்தாலும், மனிதராக இருந்தாலும், அன்பும் பாதுகாப்பும் தான் வாழ்வின் அடிப்படை தேவைகள் என்பதை Punch-ன் கதை உலகிற்கு மீண்டும் நினைவூட்டியுள்ளது.

